Skip to main content

16 ஆம் தேதி இந்தியா மிகப்பெரிய அடியை எடுத்து வைக்கப்போகிறது - பிரதமர் மோடி!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

modi

 

கரோனா தடுப்பூசிகளுக்கு, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,  வருகின்ற 16 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்துவதில், கரோனா முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு, கரோனா தடுப்பூசி செலுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயார்நிலையை ஆராய்ந்த பிறகு, தடுப்பூசி செலுத்தும் பணிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, "ஜனவரி 16 ஆம் தேதி, கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஒரு முக்கியப் படியை எடுத்து வைக்கிறது. அந்த நாளில் இந்தியாவின் நாடுதழுவிய தடுப்பூசி (செலுத்தும்) இயக்கம் தொடங்குகிறது. நமது துணிச்சலான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்  உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்