மோடிக்கு வீட்டுக்கு திரும்ப போகிறோம் என்று பயம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

--LINKS CODE------
டெல்லியிலுள்ள இந்திராகாந்தி உள்ளரங்க மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் பிறபடுத்தப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுகையில், “5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72,000 வழங்கும் குறைந்தபட்ட வருமான திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளோம். வீட்டுக்குச் செல்ல நேரம் வந்துவிட்டதால் மோடிக்கு அச்சம் வந்துவிட்டது. எங்கள் கட்சியினால் மட்டுமே மக்களுக்கு நீதி நேர்மை நியாயத்தை அளிக்க முடியும் என்பதை அவர்( பிரதமர்) உணர்ந்துள்ளார்.
கடந்த தேர்தலுக்கு முன்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா ரூ.15 லட்சம் தருவதாக மோடி பொய் பேசினார். ஆனால், எங்களால் அந்த தொகையை தர முடியாது. அதேபோல எங்களால் பொய் சொல்லவும் முடியாது. ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்தை எங்களால் ஏழை மக்களுக்கு அளிக்க முடியும். மொத்தமாக ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.3.60 லட்சம் கோடி பணம் வரவு வைக்கப்படும். எங்களால் எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதிகளாக சொல்லுவோம்” என்று கூறினார்.