உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே இதுபற்றி விவாதிப்பதற்காக மாநில முதல்வர்களின் கூட்டத்தை வரும் 8ம் தேதி பிரதமர் கூட்டியுள்ளார். காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.