தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. அதிமுக தன்னை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொண்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். வரும் ஜூன் 16ஆம் தேதி டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், மறுநாள் பிரதமரை சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரிடம் செங்கல்பட்டு தடுப்பூசி மையம், நீட், கரோனா தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து ஆகியவற்றைப் பற்றி நேரில் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் டெல்லியில் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுவரும் அண்ணா அறிவாலய பணிகளை ஆய்வுசெய்ய முதல்வர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.