![puducherry all schools are opening January 4 th minister officially announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/yJr90oMsH0kNvZ75pQlm2D_pY3r2DCfASbJEyzkDZMI/1608102609/sites/default/files/inline-images/kannan2333.jpg)
"புதுச்சேரியில் ஜனவரி 4- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், "புதுச்சேரியில் ஜனவரி 4- ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும். அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4- ஆம் தேதியிலிருந்து காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை செயல்படும். அரை நாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள் வரலாம். புதுச்சேரியில் ஜனவரி 18- ஆம் தேதி முதல் முழுமையாகப் பள்ளிகளைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கல்லூரிகளைத் திறப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்." என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சருடன் கல்வித்துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.