மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "பணத்தை வாங்காமல் மாயாவதி எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். அவரது சொந்த கட்சி வேட்பாளர்களிடம் கூட பணம் வாங்காமல் சீட் தர மாட்டார். இப்படியிருக்கும் போது அவர் எப்படி நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்?. பணத்தை கொடுக்காமல் மாயாவதியிடம் அவரது கட்சியினர் எவரும் சீட் வாங்க முடியாது. அவர் யாருக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்” என கூறினார்.