மே மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூபாய் 1,02,709 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பில், "2021 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் ரூபாய் 1,02,709 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூபாய் 17,592 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூபாய் 22,653 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூபாய் 53,199 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூபாய் 26,002 கோடியாகவும் சேர்த்து) மற்றும் செஸ் ரூபாய் 9,265 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூபாய் 868 கோடியாகவும் சேர்த்து) உள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜிஎஸ்டி வருவாய் இந்தாண்டு 65 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, சரக்கு இறக்குமதி மூலம் வசூலான வருவாய் 56 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் வசூலான வருவாய் 69 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. தொடர்ந்து எட்டாவது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.