![suzuki](http://image.nakkheeran.in/cdn/farfuture/tbnH_lGsyWVQRrQpKOw88BQXpAw99IsFhibX3pq38f0/1536409828/sites/default/files/inline-images/suzuki-in.jpg)
பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு, இதனை எல்லாம் கட்டுப்படுத்தும் வகையில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது முதல் பேட்டரி காரை வரும் அக்டோபர் மாதம் சாலை முன்னோட்டம் செய்ய உள்ளது. 2020-ஆம் ஆண்டு முதல் பேட்டரி கார்களை இந்திய சந்தையில் டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் துணையுடன் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாய் குஜராத்தில் உள்ள ஹன்ஸல்பூரில் மாருதி நிறுவனத்தின் உதிரி பாகங்கள் பொருத்தும் இடத்தில் 'லித்தியம்-அயன் பேட்டரி' (lithium-ion battery) உற்பத்தியும் 2020-ஆம் ஆண்டு முதல் தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நேரத்தில் மாருதியின் இந்த அறிவிப்பு கார் பயன்படுத்துபவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.