
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்று இரவு இரண்டு மாவோயிஸ்டுகள் புகுந்து, ரிசார்ட் உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அந்த ரிசார்ட்டில் மாவோயிஸ்டுகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் அதிரடிப்படையினருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த அதிரடிப்படையினர் மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்துள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் துப்பாக்கியால் தாக்கிய நிலையில் அதிரடி படையினர் திரும்ப துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்ட நிலையில் இன்னொருவர் காயமடைந்தார். உயிரிழந்தவர் குறித்து தகவல்கள் ஏதும் தெரியாது இருந்த நிலையில், தற்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நேற்றைய தாக்குதலில் இறந்தது மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவனான சி.பி. ஜலீல் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.