நாடு முழுவதும் இஸ்லாமியர் மற்றும் பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், ராமச்சந்திரா குகா, அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினர்.
இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் நீதிமன்றத்தில் இரண்டு மாதங்ளுக்கு முன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த திரைப்பிரபலங்கள் மீது முசாபர்பூர் காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.