
தனது மனைவியை அவருடைய காதலனுக்கு கணவனே திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சாண்ட் கபிர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவருக்கும், ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 2017இல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு, 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பப்லு தனது தனது குடும்பத்தைக் காப்பாற்ற அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று சம்பாதித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், ஜோதிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் பப்லுவின் குடும்பத்தினருக்கு தெரியவர, இது குறித்து உடனடியாக பப்லுவிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பப்லு, இந்த பிரச்சனையை சரிசெய்ய பலமுறை முயன்றுள்ளார். ஆனால், அனைத்து தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தனது மனைவியை அவருடைய காதலனுக்கே திருமணம் செய்து வைக்க பப்லு முடிவு செய்துள்ளார். இதற்கு முதல்படியாக, தனது மனைவியின் காதல் விவகாரத்தை ஊர் மக்களிடம் தெரிவித்தார். அதன் பின்னர், நீதிமன்றத்திற்குச் சென்று தனது மனைவிக்கு அவரது காதலனோடு திருமணம் செய்து வைத்தார். பின்னர், அவர்களை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தார். அப்போது, ஜோதியும் அவரது காதலனும் மாலைகளை மாற்றிக் கொண்டனர்.
இறுதியாக, தனது இரண்டு குழந்தைகளை தானே வைத்துக் கொள்ள விரும்புவதாக பப்லு ஜோதியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. காதலனை மணந்த பிறகு ஜோதியும், பப்லுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.