குஜராத்தின் மஹிசாகர் மாவட்டத்தில் அஜன்வா கிராமத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் திரும்ப கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மக்காசோள வயலில் அறுவடை முடிந்து மக்காசோளங்கள் லாரியில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு வந்த ஒரு பாம்பு பணியாட்கள் வேலை செய்யும் இடத்தில் ஓடியுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் விலகி ஓடிய நிலையில், பர்வாத் கலா பாரியா (வயது 60) என்ற முதியவர் அங்கேயே நின்றுள்ளார். அப்போது திடீரென அவர் பக்கம் வந்த அந்த பாம்பு அவரை கடித்துள்ளது. விஷமுள்ள பாம்பு என்பதால் தான் இறந்துவிடலாம் என எண்ணிய அவர் அந்த பாம்பினை பிடித்து கண்டித்துள்ளார். அவர் கடிதத்தில் அந்த பாம்பு உயிரிழந்தது. இதனையடுத்து சற்று நேரத்தில் அந்த முதியவரும் உடல் முழுவதும் விஷம் ஏறி இறந்துள்ளார். தானும் இறந்து, தன்னை கடித்த பாம்பையும் சாகடித்த முதியவர் குறித்த செய்தி அப்பகுதி முழுவதும் வித்தியாசமாகவும், பரிதாபமாகவும் பார்க்கப்படுகிறது.