பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து நேற்று மக்களவையில் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அந்த அறிக்கையில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பிட்டு திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் சுமார் 7.5 லட்சம் பேருக்கு 9999999999 என்ற ஒரே தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
7 லட்சத்து 49 ஆயிரத்து 820 பேருக்கு, போலியாக உருவாக்கப்பட்ட 9999999999 என்ற எண் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று 8888888888 என்ற போலி எண்களை கொண்டு 1 லட்சத்து 39 ஆயிரத்து 300 பேர் பதிவு செய்துள்ளதும், 9000000000 என்ற தொலைபேசி எண்ணை 96 ஆயிரத்து 46 பேர் பதிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.