Published on 30/03/2019 | Edited on 30/03/2019
ட்விட்டரில் இன்று காலை முதல் #MainBhiBerozgar என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய புள்ளிவிவர ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரை எடுக்கப்பட்ட வேலையின்மை பற்றிய புள்ளிவிவரத்தில், இந்தியாவின் வேலையின்மை கடந்த 45 வருடங்கள் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது என்ற செய்தி கட்டுரையை பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட நிலையில் இன்று காலை முதல் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை பற்றி ட்விட்டரில் ஏராளமான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. "நானும் வேலை இல்லாதவன் தான்" என்ற அர்த்தத்துடன் கூடிய இந்த ஹாஷ்டாகில் பல இளைஞர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.