இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரத்தில் இரண்டாவது அலையை ஏற்படுத்திய டெல்டா வகை கரோனா டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்துள்ளது. இவ்வாறு உருமாற்றமான டெல்டா ப்ளஸ் வைரஸ், கேரளா மஹாராஷ்ட்ரா, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் ஏற்கனவே மத்திய அரசால் கவலைக்குரிய வகையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்ட்ராவில் தற்போது டெல்டா ப்ளஸ் வகை கரோனா அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே அந்த மாநிலத்தில் 66 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 10 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மகாராஷ்ட்ராவில் டெல்டா ப்ளஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்த 76 பேரில் ஐந்து பேர் இதுவரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.