ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரு பசுமாடுகளை கடத்தி செல்வதாக கூறி தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டதில் ஒருவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓட, மற்ற இருவர் பலமாக தாக்கப்பட்டனர். அதில் ஒருவர் மரணமே அடைந்துவிட்டார். இதற்கு பசுகாவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எவ்வளவு காரணமோ, அதேபோல காவலர்களுக்கும் இதில் பங்கு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
தாக்கப்பட்ட இசுலாமிய இளைஞர்களை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், அந்த பசுமாடுகளை முதலில் பாதுகாப்பகத்தில் விட்டுவிட்டு பொறுமையாக நிதானமாக அழைத்து சென்றதில் காயமடைந்த இருவரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பே இறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து கண்டம் தெரிவித்திருந்த வகையில், ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற தலைவர் இவ்விவகாரம் குறித்து பேசியபோது," நான் எதுவும் தவறாக கூறவில்லை, பசுமாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படும் வரை இந்த கும்பல் தாக்குதல் தொடரத்தான் செய்யும். பசுமாடுகளை கொடுமை படுத்துவதில் இருந்து மீட்க தனியாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஊடகத்தின்படி மரணமடைந்தவர் ஒரு பசுவை கடத்தியவர் தான்" என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.