Skip to main content

சமையல் எரிவாயு விலை குறைப்பு...

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

 

cyl

 

ரூபாய் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணையின் விலை சரிவு ஆகிய காரணங்களால் சமையல் எரிவாயு விலையை குறைப்பதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி மானிய சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 6 ரூபாய் 52 காசுகளும், மானியமில்லா சிலிண்டர் விலையை 133 ரூபாயும் குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் கடத்தல் சம்பவங்கள்; சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

trichy international airport foreign currency incident 

 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (27.02.2023) மாலை சிங்கப்பூருக்கு புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் காத்திருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு ஆண் பயணி கையில் கொண்டு சென்ற கைப்பையில் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட டாலர்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 24 லட்சத்து 57 ஆயிரம் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அதேபோல் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு பெண் பயணி கொண்டு சென்ற கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர் அதில் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண் பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் மதிப்பிலான கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

வருடத்திற்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Two free cylinders per year for people..

 

குஜராத்தில் மக்களுக்கு இலவசமாக இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

குஜராத்தில் விரைவில் சட்டபேரவைத் தேர்தல் வர உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை குஜராத் அமைச்சர் ஜீட்டு வகானி தெரிவித்தார். 

 

தீபாவளி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி பிரதமரின் உத்வாலா யோஜனா  திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இந்த இலவச சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தில் 38 லட்சம் மக்கள் ஓராண்டுக்கு இரண்டு சிலிண்டர்களை பெற்று பயனடைவார்கள் என கூறப்படுகிறது. சி.என்.ஜி மற்றும் பி.என்.ஜி மீதான வாட் வரியில் 10% குறைக்கப்படும் எனவும் குஜராத் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து அமைச்சர் ஜீட்டு வகானி கூறுகையில் மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக 650 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.