Skip to main content

லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

பகர

 

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஏற்கனவே முதல் நான்கு வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதுடன், நான்கு வழக்குகளிலும் சேர்த்து மொத்தமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

 

இருப்பினும் இந்த நான்கு வழக்குகளின் தீர்ப்புகளுக்கும் எதிராகவும் மேல்முறையீடு செய்துள்ள லாலு பிரசாத் யாதவ், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் இருந்து ஜாமீன் பெற்றுள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான ஐந்தாவது மற்றும் இறுதி வழக்கான டொராண்டா கருவூலத்தில் இருந்து 139.35 கோடி சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட வழக்கிலும் குற்றவாளி என அவர் அறிவிக்கப்பட்டார்.

 

மேலும் லாலு பிரசாத் யாதவோடு சேர்த்து மொத்தம் 75 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 35 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் லாலு பிரசாத் உள்ளிட 40 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில் லாலுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்