ஊழல் வழக்கு தொடர்பாக, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.
ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனுக்கு தொடர்புடைய 15 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, நடைபெற்ற பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. பீகார் தலைநகர் பாட்னா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பாட்னாவில் மட்டும் நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மாட்டுத் தீவன வழக்குகளைச் சந்தித்த லாலு பிரசாத் யாதவ், ஏற்கனவே சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.