Skip to main content

லல்லு பிரசாத் யாதவ் சரணடைந்தார்... 

Published on 30/08/2018 | Edited on 30/08/2018
lallu prasad

 

 

 

கால்நடை தீவன வழக்கில் கைது செய்யப்பட்ட பிஹார் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், தன்னுடைய மகன் திருமணம், மருத்துவ சிகிச்சை என்று அவருக்கு மூன்று மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. 
 

இந்த ஜாமீன் முடியவிற்கும் நிலையில், மேலும் மூன்று மாதம் ஜாமீன் வேண்டும் என்று ராஞ்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அதை நிராகரித்து ஆகஸ்ட் 30ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் மும்பையில் மருத்துவம் பார்த்துவந்தவர்  சில நாட்களுக்கு முன்பு பிஹார் வந்தடைந்தார்.
 

 

 

நீதிமன்றத்தில் சரணடைவதாக உத்தரவிடப்பட்டதால் நேற்று பாட்னாவில் இருந்து ராஞ்சி வந்தடைந்தார். உத்தரவிட்டதுப்படி, ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார் லல்லு பிரசாத் யாதவ்.      
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதால் எந்த பயனும் இல்லை” - இந்தியா கூட்டணி தலைவர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
 India Alliance leader omar abdullah says There is no point in criticizing PM Modi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தங்களுக்கான ஆதரவை பெருக்கி வருகின்றன. மேலும், தொகுதி வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடத்தி வருகின்றன. இந்தியா கூட்டணியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவும் இணைந்துள்ளார். 

இந்த நிலையில், அண்மையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, “மோடிக்கு குடும்பம் இல்லை” என்று கூறி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. மேலும், பா.ஜ.க தலைவர்கள் பலர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தங்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்று மாற்றி எதிர்வினையாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று (09-03-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், லாலு பிரசாத் யாதவ்வின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இத்தகைய கோஷங்களை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அதனால், நமக்கு எந்தவித பயனும் இல்லை. இதுபோன்ற கோஷங்கள், எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. மோடியின் சொந்த வாழ்க்கையை தாக்கி, வழிமறிக்க ஆளில்லாத கோல் போஸ்டை அவருக்கு கொடுத்துவிட்டோம். அதை அவர் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் 140 கோடி மக்கள் தனது குடும்பம் தான் என்று பதிலடி கொடுத்துவிட்டார். இப்போது நம்மிடம் அதற்குப் பதில் இல்லை” என்று கூறினார்.

Next Story

லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; அமலாக்கத்துறை நடவடிக்கை

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Enforcement action on Charge sheet filed against Lalu Prasad's family

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2004 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சிக் காலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறைந்த விலைக்கு நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் அவரது மகனான பீகாரின் தற்போதைய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத்தின் மகளும் எம்.பி.யுமான மிசா பாரதி, சந்தா, ராகிணி ஆகியோரை விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது. அதன் பிறகு, கடந்த ஜூலை 3 ஆம் தேதி அன்று இந்த வழக்கில் சி.பி.ஐ. இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள குடியிருப்பு வீடு மற்றும் பாட்னாவில் உள்ள சொத்துக்கள் எனப் பல்வேறு இடங்களில் உள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து , பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவருடைய தந்தையும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இருவரும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை நேற்று (09-01-24) டெல்லியில் உள்ள பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 4,751 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், லாலு பிரசாத் யாதவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, அவருடைய மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ், குடும்ப நண்பரான அமித் கத்யால், ரயில்வே முன்னாள் ஊழியர் ஹிருதயானந்த் சவுத்ரி மற்றும் ஏ.கே.இன்போசிஸ்டம்ஸ், ஏ.பி.எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் என மொத்தம் 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு வருகிற ஜனவரி 16 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.