மேற்கு வங்க மாநில சட்டசபையில் மக்கலை பீதியடைய செய்யும் அளவிற்கு ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்ன மசோதா தெரியுமா? பொது இடத்தில் அசுத்தம் செய்வோருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிப்பதாம்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி நடைபெறுகிறது. சமீபமாக இவர் கொல்கத்தா காளி கோவிலுக்கு செல்லும் வகையில் 60 கோடி ரூபாய் செலவில் நடை மேம்பாலம் ஒன்றை கட்டி, பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் மம்தா இவ்வழியாக சென்றார். அப்போது அங்கு பல இடங்களில் அசுத்தம் செய்யப்பட்டுள்ளதை பார்த்து மிகவும் கவலை அடைந்தார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதமாக ரூ. 1 லட்சம் வரை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவையும் கொல்கத்தா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.