தெலுங்கானாவில் உள்ள கமரடி மாவட்டத்தின் பாரமஜெடா கிராமத்தில் 25 வயதான தன் மருமகன் ரிமோட் கேட்டு சண்டைபோட்டதால் சவரகத்தியை வைத்து மருமகனின் வயிற்றில் குத்திய மாமனார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ்சார் கூறியது, மங்கலி வெங்கட், அக்ஷிதாவை திருமணம் செய்துகொண்டு அவரது மாமனார் வீட்டிலே வசித்து வந்தார். அவரது மாமனார் புஜ்ஜயா சலூனிலேயே வேலைபார்த்து வந்தார். கடந்த புதன்கிழமை மது அருந்திவிட்டு வந்த வெங்கட் ஐ.பி.எல் பார்க்கவேண்டும் ரிமோட் கொடுங்கள் என்று கேட்டதற்கு முடியாது நாடகம் பார்க்க வேண்டும் என்று புஜ்ஜயா கூறியுள்ளார்.
இருவருக்கிடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில் சண்டை முற்றி புஜ்ஜயா வெங்கட்டை சவரகத்திக்கொண்டு குத்தியுள்ளார். அதன் பின் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்து நாட்கள் கோமாவில் இருந்தவருக்கு சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புஜ்ஜயா மீது ஐ.பி.சி 302 ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.