Published on 08/02/2021 | Edited on 08/02/2021
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனுக்குக் கரோனா தொற்று உறுதியாகிய நிலையில், அதனைத்தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 192 மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் 72 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மலப்புர மாவட்ட சுகாதார ஆணையம், விழிப்புணர்வோடு இருக்கும்படி அம்மாவட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கரோனா தொற்று உறுதியானவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.