Skip to main content

கேரள குண்டுவெடிப்பு சம்பவம்; உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 Kerala blast incident; Increase in casualties to 4

 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் கடந்த 29.10.2023 அன்று ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது காலை 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன.

 

கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. 

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த பலர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தனியார் மருத்துவமனையில் 65 சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் உயிரிழந்ததால் இந்த சம்பவத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்