கெஜ்ரிவால் - கோபால கிருஷ்ண காந்தி சந்திப்பு
எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் முன்னாள் குடிமைப்பணி அதிகாரியும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தலில் ஆதரவு கோரினார். டெல்லி முதல்வர் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாரை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் ஆளும் பாஜகவின் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். தேர்தல் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெறவுள்ளது.