கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமானவரித் துறை ரெய்டுகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன. இதை எதிர்த்து கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர்களான குமாரசாமி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ், சா.ரா.மகேஷ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் தனது அன்றாட வாழ்க்கையை பாதித்தது என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது என்றும் மல்லிகார்ஜுனா என்பவர் வழக்குத் தொடுத்தார். இந்தப் போராட்டத்தை தடுக்க நகர போலீஸ் கமிஷனர் தவறிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
நகர சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் அடிப்படையில் மத்திய அரசுக்கு எதிராக போர்தொடுத்தல், கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்தல், அச்சுறுத்தல் என்று 22 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜக அரசு மேற்கொண்டுள்ள புதிய வழி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.