Skip to main content

'நேற்று ப.சிதம்பரம்... இன்று டி.கே சிவகுமார்' ஜாமீனில் காங்கிரஸ் தலைவர்கள்!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவகுமாரின் வீட்டில் கடந்த ஆண்டு நடந்த வருமான வரி சோதனையில், கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர் கடந்த செப்டம்பர் 3ம் தேதி டி.கே.சிவகுமாரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர் தன் மீதான வ‌ழக்கை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்தார். இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீண்டும் ஜாமீன்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்