கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளன. அதில் பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 80 உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு 38 உறுப்பினர்களும் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் இருந்த போதிலும் முதல்வர் பதவியை கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு விட்டு கொடுத்தது. இதனால் அம்மாநிலத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவர் பதவியேற்ற நாள் முதல் கூட்டணியில் சலசலப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் ம.ஐ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 11 பேர் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்தனர்.
கர்நாடக அரசு கவிழ்வதை தவிர்க்கும் வகையில் சபாநாயகர் இன்று தலைமை செயலகம் வரவில்லை. இது குறித்து பேசிய சபாநாயகர் ரமேஷ் 11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாகவும், நாளை விடுமுறை என்பதால், திங்கள்கிழமை அலுவலகம் சென்று, இந்த 11 எம்.எல்.ஏக்களை அழைத்து பேசவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள முதல்வர் குமாரசாமி அவசரமாக இந்தியா புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நாளை மாலை கர்நாடக மாநிலம் வந்து விடுவார் என்றும், அதன் பிறகு கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களை சந்தித்து ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுமாறு முதல்வர் குமாரசாமி வலியுறுத்தவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் சபாநாயகர் ரமேஷ் குமார் எம்.எல்.ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை பெறாமல், தவிர்த்து வந்துள்ளார்.
இருப்பினும் ஆறு எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அவசர எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமை அழைப்பு. இந்த கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறாமல் பங்கேற்க காங்கிரஸ் கட்சி உத்தரவு. கர்நாடக மாநிலத்தில் நிலவி அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ஆளுநர் அழைப்பு விடுத்தால், கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க தயார் என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் ஆட்சி அமைத்தால் பாஜக சார்பில் எடியூரப்பா தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறினார். இதனால் கர்நாடகாவில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் கர்நாடக அரசியலை உற்று நோக்கி வருகின்றன.