Published on 01/05/2018 | Edited on 01/05/2018

கர்நாடக முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரச்சார மேடையிலேயே தூங்கி வழிந்தார். மே12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது கர்நாடக மாநிலத்தில். இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குல்பர்காவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற சித்தராமையா, மேடையிலேயே தூங்கி வழிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தூங்குவதை அருகில் இருந்தவர் குறிப்பிட்டுச்சொன்னபோதும் கன்னத்தில் கை வைத்து சமாளிக்க இயலாமல் மீண்டும் தூங்கி வழிந்தார்.