ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பான் கடற்பகுதியில் 6.7 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானின் மியாகோவிற்கு கிழக்கு-வடகிழக்காக 83 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடற்பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் அடி ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு ஏற்பட்டது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறுகையில், நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றது. ஆனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி ஆலோசனை வழங்கியது. பின்னர் திரும்பபெறப்பட்டது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு வடகிழக்கு ஜப்பானில் 8.9 என்ற ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் கடற்கரையோரப் பகுதிகளை சுனாமி தாக்கியது. புகுஷிமா அணு உலையும் பாதிப்புள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.