Skip to main content

கேரளாவில் ஜன ரக்ஷா யாத்ராவை தொடங்கிவைத்தார் அமித்ஷா ''''''''''''''

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
கேரளாவில்  ஜன ரக்ஷா யாத்ராவை
 தொடங்கிவைத்தார் அமித்ஷா 

          கேரளாவில் வரும் சட்டமன்ற தோ்தலில் பெரும்பான்மையான இடங்களை பா.ஜ.க கைப்பற்ற வேண்டுமென திட்டமிட்டு அதற்கான பல்வேறு முயற்சிகளை அமித்ஷா மேற்கொண்டு வருகிறார்.

           இந்த நிலையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகா் ராஜேஷி்ன் இல்லத்துக்கு நேரில் வந்து அவரின் குடும்பத்தினருக்கு  மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி  ஆறுதல் கூறியது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

           மேலும் கேரளாவி்ல் ஆளும் கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பாஜக மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளிலும் ஜன ரக்ஷா யாத்திரா போராட்டம் நடத்தப்படும் என்று அமித்ஷா அறிவித்து இருந்தார்.

            இந்த நிலையில் ஜன ரக் ஷா யாத்ரா போராட்டத்தை கேரளா முதல்வா் பினராய் விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூா் பையனுாரில் இருந்து பாஜக தலைவா் அமித்ஷா இன்று தொடங்கி வைத்து 4 கி.மீ நடந்து வந்தார்.  இதையொட்டி அந்த பகுதியி்ல் ஏராளமான போலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனா்.

                இந்த ஜன ரக் ஷா யாத்ரா   போராட்டதை தலைமை ஏற்று நடத்தும் பா. ஜ.க மாநில தலைவா் கும்மணம் ராஜசேகா் யாத்ராவில் நடந்தே செல்கிறார். நாளை இந்த யாத்ராவில் உத்திர பிரதேச முதல்வா் ஆதித்யா நாத் யோகி கலந்து கொள்கிறார். தொடா்ந்து பாஜக ஆளும் முதல்வா்களும் கலந்து கொண்டு இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

             இந்த மாதம்  17-ம் தேதி திருவனந்தபுரம் வந்தடையும் இந்த யாத்ராவின் நிறைவு நிகழ்ச்சி மற்றும் பொது கூட்டத்தில் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள்  நி்ர்மலா சீத்தாராமன், ராஜ்நாத் சிங், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நி்ர்வாவாகிகள் கலந்து கொள்கின்றனா்.

-மணிகண்டன்

சார்ந்த செய்திகள்