காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக வந்து உளவுத்துறை தகவல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![jammu kashmir issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/0NDqkPwRtVDhKhKOwI4fwjLdzWqMCMt1c_kfkE2jwqM/1564832951/sites/default/files/inline-images/jama.jpg)
இதனையடுத்து அம்மாநிலத்தில், அமர்நாத் யாத்திரை, மாதா யாத்திரை என்றழைக்கப்படும் துர்க்கையம்மன் யாத்திரை ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் காரணம், மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் குறித்த உளவு துறையின் தகவல் தான் என கூறப்படுகிறது.