இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வாசித்து வருகிறார். இதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இந்த 6000 ரூபாய் 3 தவணைகளாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும் எனவும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.