பிஹார், நாளந்தா மாவட்டத்தில் ராஜ்கிர் நகர் உள்ளது. அந்த நகரில் கோரா கட்டோரா ஏரியில் 70 அடி உயரத்துக்கு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, இந்தியாவிலேயே இரண்டாவது உயரமான புத்தர் சிலை ஆகும்.
நேற்று இந்த சிலையை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். ஏரியில் படகு மூலம் புத்தர் சிலைக்கு சென்ற பிஹார் முதலமைச்சர் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். மேலும் இதுகுறித்து பேசியவர், ”இந்த புனித தலத்துக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் இயக்கப்படாது. மின்சார வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும். இது மிகச் சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக உருவாகுவும்”என்றார். இந்த பகுதியில் சீக்கியர்களின் குருத்வாரா அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு வனத்துறை, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அந்த குருத்வாரா அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.