இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இருந்துவருகிறது. குறிப்பாக, கரோனா இரண்டாம் அலையின்போது தினசரி பாதிப்பு என்பது நான்கு லட்சத்தைக் கடந்தது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், அதிக அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் மீண்டும் ஒரு அலை பரவாமல் தடுக்கும் முயற்சியாக தீவிரமாக தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது கரோனா உயிரிழப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் நேற்றைய (06.12.2021) ஒருநாள் கரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் 6,822 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 558 நாட்களில் மிகக் குறைந்த ஒருநாள் தொற்று பாதிப்பாக உள்ளது. அதே நேரத்தில் 220 பேர் ஒரேநாளில் இந்த தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர். மேலும், நேற்று மட்டும் 10,004 பேர் தொற்றிலிருந்து முழுவதும் குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் 95,014 பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார்கள். மேலும், இந்தியா முழுவதும் இதுவரை 128.76 கோடி பேருக்குக் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.