Skip to main content

இந்தியாவில் 5 சதவீதம் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

corona

 

இந்தியாவில மூன்றாவது கரோனா அலை தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவலால் இந்த மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றைவிட இன்று, நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைந்துள்ளது.

 

நேற்றைய தினம் 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 385 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அதேநேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 1 லட்சத்து 51 ஆயிரத்து 740 பேர் மீண்டுள்ளனர். இதற்கிடையே நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,209 ஆக அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்