Published on 23/12/2019 | Edited on 23/12/2019
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்.
சென்னை வருகை தந்த குடியரசுத்தலைவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் குடியரசுத் தலைவர் புறப்பட்டு சென்றார்.

இரண்டு நாள் பயணமாக புதுவை வந்தடைந்த குடியரசுத்தலைவருக்கு புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். பின்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், 322 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.