இந்தாண்டு நடைபெறவுள்ள நீட் (NEET- National Eligibility Cum Entrance Test) நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ஆம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்களை https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx (அல்லது) https://ntaneet.nic.in/ntaneet/AdmitCard/AdmitCard.html என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண், பாஸ்வேர்டு, பிறந்த தேதி உள்ளிட்டவை பதிவு செய்து ஹால் டிக்கெட்டுக்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை (National Testing Agency) தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட், ஜெ.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், கட்சிகள் வலியுறுத்திய நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.