முஸ்லீம் சிறுபான்மை மக்களை மையமாக வைத்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுாிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முமுவதும் அரசியல் கட்சிகளும், மாணவா்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் மதங்களை கடந்து மனித நேயத்துக்கு அடையாளமாக திருவனந்தபுரம் சாலையில நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் கிழக்கோட்டையில் மக்கள் எந்த நேரமும் நெருக்கமாக செல்லகூடிய பகுதியாகும். இந்தபகுதியில் இருக்கும் புகழ்பெற்ற பத்மனாபசாமி கோவிலுக்கு தற்போது சபாிமலை சீசனையொட்டி ஐயப்ப பக்தா்கள் அதிகமாக வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில் நேற்று ஐயப்ப பக்தா் ஒருவா் தனது சிறுவயது மகனுடன் பத்மனாபசாமி கோவிலுக்கு சென்றுவிட்டு சாலை ஓரத்தில் உள்ள நடைபாதை வழியாக நடந்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக திடீரென்று அவாின் கால் நடைபாதை சிலாப்பின் இடையில் சிக்கி கால் விரல்கள் காயமடைந்து நடக்க முடியால் தரையிலே உட்காா்ந்தாா். இதை மற்றவா்கள் பாா்த்துவிட்டு அவரை கடந்து சென்றாா்களே தவிர உதவி செய்ய முன்வரவில்லை.
அப்போது அந்த வழியாக தோழிகளுடன் நடந்து வந்த இஸ்லாமிய பெண் ஒருவா் கடையில் இருந்து தண்ணீா் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து அந்த ஐயப்ப பக்தாின் காலில் இருந்த ரத்தத்தை கழுவி மருந்துகடையில் இருந்து மருந்து வாங்கி கட்டு போட்டார்.
மதங்களை கடந்து இன்னும் மனிதநேயம் சாகாமல் உயா்ந்து நிற்கிறது என்று உணா்த்தினாா் அந்த முஸ்லீம் பெண். அந்த பெண்ணின் மனிதநேய செயலை பலா் பாராட்டி வருகின்றனா்.