தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் திருட்டு வழக்கு ஒன்று தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த விசாரணையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த காட்சிகளை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த சிசிடிவி காட்சியில், மூன்று ஆண்கள் சாலையோரம் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு அந்த 3 நபரையும் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று பேரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த பெண் மனநலம் குன்றிய பெண் என்பதும் அவர் ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. இது குறித்து நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பெண்ணின் பெற்றோருக்கு போலீசார். தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் குன்றிய பெண்ணை மூன்று ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.