ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஈடுபடும் போது, அனந்தநாக் மாவட்டத்தில் ஒட்டிய பகுதியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டனர்.
அவர்கள் இருவரை தேடி வந்த நிலையில், ஒருவர் மட்டும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பித்து வந்தார். காயமடைந்த ராணுவ வீரரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரான ஹிலால் அஹ்மத்தை, இந்திய ராணுவத்தினரை தேடி வந்த நிலையில், அவரின் உடலை அனந்தநாக்கில் உள்ள உட்ரசோ பகுதியில் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில், ராணுவ வீரர் ஒருவர் பயங்கரவாதிகளால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.