12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் தரஹர ஹனுமான் தோலா பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் சம்பவம் நடந்த அன்று, தன்னுடிய மாமா வீட்டுக்கு பொருள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது, அவர் அந்த சிறுமியை அடித்து வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அந்த சிறுமியின் உடலை கட்டிலில் கட்டி வைத்துள்ளார்.
அந்த சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்று சந்தேகமடைந்த அந்த சிறுமியின் குடும்பத்தார், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார், சிறுமியின் மாமா வீட்டிற்கு சென்று பார்த்தப்போது, அங்கு சிறுமி கட்டிலில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து, அங்கு நடந்த சம்பவத்தை போலீசார் சிறுமியின் வீட்டில் தெரியப்படுத்தி, அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் அந்த சிறுமியின் மாமாதான் என உறுதிபடுத்திய பின்னர், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் மூலம் ஒரு சிறுமிக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.