ரயில் பாதுகாப்பை மேம்படுத்த 15,000 கோடி
ரயில் பாதுகாப்பை மேம்படுத்த அடுத்த 12 மாதங்களில் 15,000 கோடி செலவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் பாதைகளில் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும். அதிக பயணிகள் வந்துசெல்லும் ரயில் நிலையங்களில் நெரிசலை தவிர்க்க உயர்மட்ட நடை மேம்பாலம், அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு காத்திராமல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பொது மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பை விபத்துக்கு பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.