Skip to main content

வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெண் பதவியேற்க வாய்ப்பு!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

bv nagarathna

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஒன்பது நீதிபதிகளைப் பரிந்துரை செய்துள்ளது. இந்த ஒன்பது நீதிபதிகளில் மூன்று பேர் பெண் நீதிபதிகள்.

 

இந்த மூன்று பெண் நீதிபதிகளில் ஒருவரான பி.வி. நாகரத்னாவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள அவர், சீனியாரிட்டி அடிப்படையில் 2027ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம். அவ்வாறு பி.வி. நாகரத்னா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்ணாக அவர் இருப்பார்.

 

பி.வி. நாகரத்னாவின் தந்தை இ.எஸ். வெங்கடராமையா, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்