Skip to main content

பிரவசத்தின் போது மருத்துவர்களின் வாக்குவாதத்தால் இறந்து பிறந்த குழந்தை!

Published on 30/08/2017 | Edited on 30/08/2017
பிரவசத்தின் போது மருத்துவர்களின் வாக்குவாதத்தால் இறந்து பிறந்த குழந்தை!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் உள்ள உமைத் மருத்துவமனையில், பிரசவத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் அலட்சியத்தால், குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிற்கு அறுவைச் சிகிச்சை மூலமாக பிரசவம் பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். குழந்தையின் இதயத்துடிப்பு குறித்த கேள்வி எழுந்ததால், மகப்பேறு மருத்துவர் அசோக் நானிவால் மற்றொரு மருத்துவரான மதுரா லால் தக்-கிடம் சோதனை செய்துபார்க்கச் சொல்லியிருக்கிறார்.

இதில் இரண்டு மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கடுமையான வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டுள்ளனர். இதனை மருத்துவமனை ஊழியர் ஒருவர் ரகசியமாக தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். பின்னர் சமாதானமடைந்த மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

இதுகுறித்து மூத்த மருத்துவர் ரஞ்சனா, ‘குழந்தையின் மரணம் குறித்த சரியான தகவல்கள் வெளிவரவில்லை. மூச்சுத் திணறல் காரணமாக இறந்திருக்கலாம். மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்