![rahul](http://image.nakkheeran.in/cdn/farfuture/3rpPj6I9MrrSgFLBfsxxnWupJeP_BF2nCZMxtbQV5hY/1535545320/sites/default/files/inline-images/rahul%20gandhi_1.jpg)
கேரளாவுக்கு இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை பார்த்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், கொச்சியில் இருந்து பேட்டியளித்துள்ள ராகுல் காந்தி," இந்த பேரிடரை அரசியலாக்க விரும்பவில்லை. இரண்டு நாட்களில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பல மக்களை சந்தித்தேன். அவர்கள் தங்களுடைய வீடுகளை இழந்து நிலைகுலைந்துள்ளனர். மத்திய அரசு அறிவித்ததை போலவே, விரைவில் நிதியை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். கேரள முதலமைச்சர் பினராயிடனும் பேசினேன்.
கேரளாவுக்கு போதிய அளவிற்கு மத்திய அரசு நிதி வழங்காதது வருத்தம் அளிக்கிறது. கேரள மக்களுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும், உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.