
மகராட்ஷ்ரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர்கள் மொய்தினுதின் அன்சாரி(42) - பர்வீன்(26) தம்பதியினர். இந்த நிலையில் மொய்தினுதின் அன்சாரிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அன்சாரி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், இதனிடையே கணவர் அன்சாரி மனைவி பர்வீனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டும் தகராறு செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கணவர் அன்சாரி மனைவி பர்வீனிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று பர்வீன் கூற ஆத்திரமடைந்த அன்சாரி அவரை பலமாக தாக்கிவிட்டு வீட்டில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பர்வீனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பர்வீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் மருத்துவமனை வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.