கணவன், குழந்தை கண்முன் பெண் கூட்டு பலாத்காரம்!
உ.பி.,யில் பயங்கரம்!
உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவரை அவரது கணவன், குழந்தை கண்முன்பாக 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், முஸாபர்நகரில், ஒரு தம்பதியினர் தங்கள் 3 வயது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை வழி மறித்து, கடுமையாக தாக்கி அருகில் இருந்த கரும்பு தோட்டத்துக்குள் இழுத்து சென்றுள்ளனர்.
பின் அந்த பெண்ணின் கணவரை ஒரு மரத்தில் கட்டி போட்டு, சத்தம் எழுப்பினால் குழந்தையை கொன்று விடுவோம் என மிரட்டி அந்த பெண்ணை அவர் கணவன், குழந்தை கண்முன் அந்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர்.
இதனிடையே அவர்கள் அழுது, கதறிய சத்தம் கேட்டு, அருகில் இருந்த விவசாயிகள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் அங்கிருந்து அவர்கள் மீட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அந்த கும்பலை தேடிவருகின்றனர்.