Published on 06/09/2018 | Edited on 06/09/2018
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் இயற்கைக்கு மாறாக உடலுறவு (ஓரின சேர்க்கை) கொண்டால் தவறு என சட்டப்பிரிவு 377 கூறுகிறது. ஓரின சேர்க்கை குற்றத்திற்கு 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனையும் அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை கடந்த ஜூலை மாதம் முடித்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.