கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் இன்று மாலையிலிருந்து டெல்லியில் புழுதி புயல் வீசத் தொடங்கியது. மாலை சூறைக்காற்றுடன் மழை பொழிந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்குவது உள்ளிட்டவற்றால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில நாட்களாகத் தொடர்ந்து கோடை வெப்பம் அதிகரித்த நிலையில் இன்று டெல்லியில் பெய்த கனமழை கோடை வெப்பத்தை தணித்துள்ளது என்றாலும் புழுதிப்புயல், பலத்த காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை வரை இதே போன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், இது கோடை மழை தானே தவிர பருவமழை அல்ல எனவும் வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.